நட்பு மட்டுமே ஆன்மாவாக மாறி நிறைந்து ஒளிரும் கண்களுடன் நட்பேயான வாலுடன் நட்பேயான காதுகளுடன் நட்பேயான குரைப்புடன் நட்பேயான குளிர்நாசியுடன் என் கண் முன்னால் ஒரு நாய் நின்றது. ‘நான் உனக்கு’ என்றது. ‘நீயே நான்’ என்றது. ‘நீ என்னை நம்பலாம், எந்த இறைவனுக்கும் நிகராக’ என்றது. ‘ஏனென்றால் இறையெனப்படுவது ஒன்று உண்டென்றால் அது ததும்பிச் சொட்டிய ஒரு துளியே நான்!’
~ ஜெயமோகன் (யானை டாக்டர் p. 27)